சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை - சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண

10 Nov, 2023 | 08:14 PM
image

(எம்.ஆர்,எம், வசீம், இராஜதுரை ஹஷான்)

திருகோணமலை மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் நிலவும்  வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேநேரம் நாடளாவிய  ரீதியில் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுவதுடன் எதிர்வரும் இரண்டு வருடங்களில் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட அரசாங்க வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது இம்ரான் மஹ்றூப் எம்பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விசேட மருத்துவர்கள் மற்றும் வைத்தியர்கள்  நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதால் நாட்டில் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளிலும் மருத்துவர்களுக்கான குறைபாடு காணப்படுகிறது.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.

அத்துடன் வைத்தியர்  உள்ளிட்ட சுகாதாரத்துறை வெற்றிடங்களில் உடனடியாக முழுமையாக நிரப்புவதற்கு முடியாவிட்டாலும் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி முடிந்தளவில் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிற்சிக்குப் பின்னரான டாக்டர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் போது திருகோணமலை கந்தளாய் வைத்தியசாலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல்...

2024-12-10 00:53:34
news-image

தேங்காய் ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள்...

2024-12-09 20:37:12
news-image

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை...

2024-12-09 17:09:44
news-image

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை...

2024-12-09 20:47:19
news-image

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

2024-12-09 20:40:05
news-image

ரத்வத்தவின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

2024-12-09 20:31:59
news-image

ரணிலை காட்டிலும் அநுர அடிபணிந்துள்ளார் -...

2024-12-09 17:07:33
news-image

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக...

2024-12-09 19:33:14
news-image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்...

2024-12-09 19:09:03
news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39
news-image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக...

2024-12-09 17:32:46
news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46