லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்று, இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் பொருட்கள் பல திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது வீட்டு உரிமையாளர்கள் வீட்டில் இருக்கவில்லை 12 பவுண் தங்க நகை திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.