லால் சலாமில் சுப்பர் ஸ்டார்???

10 Nov, 2023 | 03:28 PM
image

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘லால் சலாம்’ படம் பற்றிய முக்கியமான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

அதன்படி, கிரிக்கெட் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில், அதேநேரம், ஆழமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விடயம் வெளியாகி, இரசிகர்களின் பேராவலைத் தூண்டியிருக்கிறது.

2024 பொங்கல் அன்று வெளியாகவிருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் டீஸரை, தீபாவளியன்று வெளியிட படக்குழுவினர் தயாராகியுள்ளனர்.

விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், ஜீவிதா ராஜசேகர், நிரோஷா, கபில்தேவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நீண்ட காலத்தின் பின், நடிகை ஜீவிதா தமிழ்ப் படத்தில் நடித்திருப்பதும் சுவாரசியமான தகவல்தான்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

லைகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வெளியிடவிருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்