தள்ளிப்போவாரா தனுஷ்?

10 Nov, 2023 | 03:27 PM
image

முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில், ஒரு இராணுவ வீரராக தனுஷ் நடித்திருக்கும் புதிய படம் ‘கேப்டன் மில்லர்’.

இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன், சாணி காயிதம், ரொக்கி போன்ற படங்களை இயக்கியும் இறுதிச் சுற்று படத்துக்கான வசனத்தை எழுதியும் கவனம் ஈர்த்திருப்பவர் அருண்.

கேப்டன் மில்லர் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி இந்தப் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், பொங்கல் போட்டியில் இந்தப் படத்தையும் வெளியிட தற்போது முடிவெடுத்திருக்கிறது சத்யஜோதி நிறுவனம்.

டிசம்பர் 15ஆம் திகதியன்று ஷாருக் கானின் ‘டுங்க்கி’யும் பிரபாஸின் ‘சலார்’ திரைப்படமும் வெளியாகிறது. இந்த நிலையில், இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் தனுஷின் கேப்டன் மில்லரையும் கொண்டுவருவதற்கு சத்யஜோதி நிறுவனம் முடிவெடுத்திருந்தது.

எனினும், தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சராம், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் சுந்தர் .சியின் அரண்மனை 4 போன்ற படங்களுடன் கேப்டன் மில்லர் வெளியானால், இன்னும் அதிக வெற்றியை ருசிக்கலாம் என்று சத்யஜோதி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்