ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் வதிவிட தூதுவர் விடாலி ஜுர்க்கின், அவரது அலுவலகத்தில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (20ஆம் திகதி) தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, விடாலி ஜுர்க்கின் இறந்துள்ளதாக,  ரஷ்யாவின் நிரந்தர ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜுர்க்கின் சுமார் 40 வருடங்களை ரஷ்யாவின் தேசிய பணிக்காக அர்பணித்துள்ள நிலையில், 20 வருடங்கள் பெல்ஜியம் மற்றும் கனடாவிற்கான  உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின்  ஐ.நாவிற்கான வதிவிட தூதராக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் விடாலி  ஜுர்க்கின் உயிரிழந்த சம்பவம், ஐ.நா அலுவலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.