மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று காலை மகாம்மா காந்தி பூங்காவில் மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் ஆரம்பமானது.

மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாமலுள்ள சுமார் 1500 பட்டதாரிகள் இதில் இணைந்திருந்தனர்.

நிரந்த நியமனம் வழங்குமாறு மாகாண முதலமைச்சரைக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

அதிகளவிலான பெண் பட்டதாரிகளும் இதில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

காலவரையறையின்றி எமது போராட்டம் தொடருமென பட்டதாரிகள் சங்க தலைவர் கே.கிரிசாந்த் தெரிவித்தார்.