வவுனியா ஓமந்தை கமநல சேவைகள் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்தில் முதற் தடவையாக கமநல கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் எனும் கல்விச் செயற்றிட்டம் இன்று நேற்றுக் காலை 10 மணியளவில் ஓமந்தை கமநல சேவைகள் திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. க. திலீபன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பெண் தலைமைதாங்கும் குடும்பங்களின் பிள்ளைகள் தரம் ஒன்று தொடக்கம் பல்கலைக்கழகம் செல்லும் வரையில் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவி மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளை அந்நிதியத்தினூடாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிதியத்தின் செயலாராக ஓமந்தை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தார், போசகராக கமநல மாவட்ட உதவி ஆணையாளர் ஆகியோர் செயற்படவுள்ளதுடன் தலைவர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களின் தெரிவும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மாவட்ட கமநல உதவி ஆணையாளர்  ஆர். விஜயகுமார், கமநல அபிவிருத்திக் குழு தலைவர், உப தலைவர், கிராம அலுவலகர், பாடசாலை அதிபர்கள், கமக்கார அமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.