கறுப்பினம் என்றாலே பல பிரச்சினைகளை கொண்ட நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. கறுப்பினத்தவர்கள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகிறார்கள். கறுப்பினத்தவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஜோர்ஜ் பிளெட் மரணத்தில் கண் கூடாக பார்த்தோம்.
இதேபோன்று சம்பவம் தான் சமீபத்தில் இடம் பெற்றுள்ளது.
அதாவது கறுப்பின பெண்களின் சுருள் தலை முடியும் அமெரிக்காவில் கேலி செய்யப்படுவது தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், இவ்வாறு கேலிக்குள்ளாகிய பெண்கள் தங்கள் தலைமுடியை இராசாயன முடி தளர்த்திகளை (Hair Relaxers) பயன்படுத்தி நீண்ட சீரான தலைமுடியாக மாற்றியுள்ளார்கள். இது அவர்களுக்கு எமானகியுள்ளது.
அதாவது, கறுப்பினப் பெண்கள் பல ஆண்டுகளாக தாங்கள் பயன்படுத்திய இரசாயன முடி தளர்த்திகளால் புற்று நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
என்ன நடந்தது?
கருப்பை புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் இராசாயன முடி தளர்த்திகளை விற்பனை செய்த அழகுசாதன நிறுவனங்கள் மீது கறுப்பின பெண்கள் அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் என்பது பெண்களின் கர்ப்பப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் கருப்பைவாய் (cervix) பகுதியில் ஏற்படும் புற்றுநோய் ஆகும்.
இந்த புற்றுநோய் அமெரிக்காவில் குறிப்பாக கறுப்பின பெண்களிடையே அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இவ்வருடம் சுமார் 66,000 கர்ப்பப்பை வாசல் புற்றுநோயாளர்கள் கண்டறியப்படலாம் என அமெரிக்க புற்றுநோய் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
இது 297,790 புதிய மார்பக புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையில் கால் பகுதிக்கும் குறைவானது எனவும், 19,710 சூலகப்புற்று புற்றுநோயாளர்களை விட மூன்று மடங்கு அதிகமானது எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நான்கு தடவைகளுக்கு மேல் இரசாயனமுடி தளர்த்திகளை (Hair Relaxers) பயன்படுத்திய 33,000 பெண்களுக்கு கர்ப்பப்பை வாசல் புற்று புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு இருமடங்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வில் மொத்தம் 378 பெண்களுக்கு கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கறுப்பின பெண்கள் மற்றவர்களை விட இரசாயன முடி தளர்த்திகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் புற்றுநோய் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், இரசாயன முடி தளர்த்திகள் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கு இடையே ஒரு தொடர்பை ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்நிலையில், கறுப்பினப் பெண்களால் இரசாயன முடி தளர்த்திகளுக்கு எதிராக குறைந்தது 550 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினர்
இரசாயன முடி தளர்த்திகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தயாரிப்புகள் கடுமையான பாதுகாப்பு மதிப்பாய்வுகளுக்கு உட்பட்டவை என தெரிவித்துள்ளனர். அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வு செய்யும் நிபுணர்கள் பெண்களின் புற்றுநோய்க்கான காரணம் குறித்து உறுதியான முடிவுகளை எடுக்கவில்லை என்றும் மேலும் ஆராய்ச்சி தேவை என்றும் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
முதலில் புகார் அளித்தவர் யார்?
தேசிய சுகாதார நிறுவனம் புற்று நோய் ஆய்வு தொடர்பில் வெளியிட்ட தகவலை அடுத்து 2020 ஆம் ஆண்டில் மினியாபோலிஸில் பொலிஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் பிளாய்ட்டின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பென் க்ரம்ப் மற்றும் ஜென்னி மிட்செல் என்ற மிசோரி பெண்ணின் சார்பாக முதல் முடி தளர்ச்சி வழக்கைத் தாக்கல் செய்த வழக்கறிஞரான டியாண்ட்ரா "ஃபு" டெப்ரோஸ் சிம்மர்மேன் ஆகிய இருவர் வழக்கு தாக்கல் செய்தனர்.
அதனை தொடர்ந்து 7,000க்கும் மேற்பட்டோர் வழக்கு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பல மாவட்ட வழக்கு விசாரணையின் (MDL) ஒரு பகுதியாக சிக்காகோ நீதிமன்றத்தில் வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது பல அதிகார வரம்புகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மிகவும் திறமையாக நிர்வகிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். வழக்குகளில் வலியுறுத்தப்பட்ட சட்ட உரிமைகோரல்கள் இனப் பாகுபாட்டைக் குற்றம் சாட்டவில்லை என்றாலும், வழக்குகள் "அடிப்படையில் சிவில் உரிமை பிரச்சினைகளாக" பார்க்கப்பட வேண்டும் என்று க்ரம்ப் கூறுகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM