பனாகொட பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் ஐந்து ஊழியர்களை, ஊழியர் சேமலாப நிதியுடன் இணைக்காமல் வர்த்தக நிலையத்தை நடத்திச் செல்வதற்காக 400,000 ரூபாவை வர்த்தகரிடம் இலஞ்சமாக கோரினார் என்ற குற்றச்சாட்டில் தொழில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை கைது செய்ததாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் 5 ஊழியர்களுக்கு 11 இலட்சம் ரூபாவை ஊழியர் சேமலாப நிதியாக செலுத்த வேண்டியுள்ளதாகவும், அத்தொகையை செலுத்தாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக நான்கு இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நவகமுவ, ரணால பிரதேசத்தை சேர்ந்த, தொழில் திணைக்களத்தின் கள அதிகாரி என கூறப்படும் 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM