ஜனாதிபதி - ஸ்கொட் நாதன் சந்திப்பு: பொருளாதார மறுசீரமைப்பு, தரமான முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பில் ஆராய்வு

Published By: Vishnu

08 Nov, 2023 | 07:46 PM
image

(நா.தனுஜா)

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நாதனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பின்போது சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் தரமான முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கான முயற்சிகள் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசியப் பிராந்தியத்துக்கு மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கக்கூடிய ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையம் ஒன்றை அபிவிருத்தி செய்யும் பணிக்கு உதவுவதற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனம் 553 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. இந்நிதியுதவி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நாதன் இரண்ட நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு  செவ்வாய்கிழமை (7) நாட்டை வந்தடைந்தார்.

இவ்விஜயத்தின்போது சுகாதார விஞ்ஞான சர்வதேச நிலையம், கொழும்பு துறைமுகம் போன்றவற்றைப் பார்வையிட்ட அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும், தனியார்துறை முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் தரமான முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கான முயற்சிகள் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதுமாத்திரமன்றி இலங்கையின் தனியார்துறை மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக அந்நாட்டுத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஸ்கொட் நாதனுக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு இருநாடுகளும் இணைந்து கூட்டாக முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்தோடு ஜனநாயக ரீதியான மறுசீரமைப்புக்கள் மற்றும் நியாயமான சட்டங்கள் ஊடாக வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தில் நேர்மறையான மாற்றத்தை அடைந்துகொள்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை சக்திவலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் நாட்டின் தனியார்துறை வங்கிக்கட்டமைப்புக்களின் அதிகாரிகள் உள்ளிட்டோரையும் சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நாதன் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28