நெடுந்தீவில் கைதான நான்கு தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

Published By: Vishnu

08 Nov, 2023 | 07:49 PM
image

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த தமிழக கடற்தொழிலாளர்கள் நால்வருக்கு 5 வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை ஏனைய 22 கடற்தொழிலாளர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கடற்தொழிலாளர்களின் படகினை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். 

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 26 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அதன் போது அவர்களின் மூன்று படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி இருந்தனர். 

மறுநாள் 15ஆம் திகதி கடற்படையினர் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் 26 கடற்தொழிலாளர்களையும் முற்படுத்தினர். அதனை அடுத்து கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது தவணையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 26 கடற்தொழிலாளர்களில் ஒருவர் மூன்று படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் என கண்டறியப்பட்ட நிலையில், அவரின் படகை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதவான், அந்த படகில் இருந்த 4 கடற்தொழிலாளர்களுக்கும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனை விதித்தார். 

ஏனைய 22 கடற்தொழிலாளர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் நீடித்து உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப்...

2025-04-22 01:51:07
news-image

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...

2025-04-21 23:18:09
news-image

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

2025-04-21 23:10:54
news-image

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ...

2025-04-21 19:57:04
news-image

மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால்,...

2025-04-21 22:15:04
news-image

பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர்...

2025-04-21 15:48:26
news-image

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்...

2025-04-21 19:54:29
news-image

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் மறைவுக்கு...

2025-04-21 20:07:44
news-image

பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட...

2025-04-21 19:48:28
news-image

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார்...

2025-04-21 19:44:36
news-image

திருகோணமலையில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட...

2025-04-21 20:11:44
news-image

கிழக்கில்  அதிக வெப்பம் ! -...

2025-04-21 20:01:33