(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாரா நிறுவனம் இலங்கைக்கு சேவையாற்றுகிறதா அல்லது இலங்கையின் கடற்பரப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக இலாபமடையும் சர்வதேச நிறுவனங்களுக்கு சேவையாற்றுகிறதா ? நாட்டின் கடற்பரப்பை பயன்படுத்தும் கப்பல்களிடமிருந்து கட்டணம் அறவிடும் வரைபை நாரா நிறுவனம் தயாரிக்காத காரணத்தால் வருடாந்தம் 60 பில்லியன் ரூபாவை இழக்க நேரிட்டுள்ளது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (08) இடம்பெற்ற நீதிமன்றம்,நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டின் கடல் எல்லையை கண்காணிக்கும் பொறுப்பு தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (நாரா) வழங்கப்பட்டுள்ளது.நாட்டின் கடல் எல்லையை பயன்படுத்தும் படகுகள் மற்றும் கப்பல்கள் இலங்கைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
தெற்கு கடற்பரப்பில் ஒரு நாளைக்கு மாத்திரம் 310 கப்பல்கள் பயணிக்கின்றன.வருடாந்தம் சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமான கப்பல்கள் இலங்கையில் கடல் எல்லையை பயன்படுத்துகின்றன.இலங்கையின் கடல் எல்லையை பகுதியாக பிரித்து கட்டணம் அறவிடும் வகையில் வரைவு ஒன்றை தயாரிக்கும் பொறுப்ப நாரா நிறுவனத்துக்கு 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.ஆனால் இதுவரை நாரா நிறுவனம் அந்த வரைபை தயாரிக்கவில்லை.
இலங்கையின் கடற்பரப்பை பயன்படுத்தும் கப்பல்களிடமிருந்து கட்டணம் பெறும் வரையை பிரித்தானிய நிறுவனம் தயாரித்து இலாபம் பெறுகிறது.இந்த நிறுவனம் நாராவுக்கு சதவீதமளவிலாவது கட்டணம் செலுத்துகிறதா என்பதை அறியவில்லை.
கடல் எல்லையை வகுத்து வரைபு தயாரிக்கும் திறமையானவர்கள் நாரா நிறுவனத்தில் இல்லை மறுபுறம் தொழில்நுட்ப வளமும் நாரா நிறுவனத்தில் இல்லை. நாரா நிறுவனம் இலங்கைக்கு சேவை செய்கிறதா அல்லது இலங்கையின் கடல் எல்லையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வரைபு தயாரித்து இலாபமடையும் நிறுவனத்துக்காக செயற்படுகிறதா என்பது பிரச்சினைக்குரியது.
நாரா நிநுவனம் கடந்த 33 வருடங்களாக குறித்த வரைபை தயாரிக்காத காரணத்தால் இலங்கை வருடாந்தம் சுமார் 60 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது.இதுவும் ஒருவரையான மோசடியே நாரா நிறுவனத்தின் குறைப்பாட்டால் அரச வருமானத்தை தொடர்ந்து இழக்க கூடாது என்பதற்காக நீரியர் வளங்கள் மேம்பாட்டு தொடர்பான சட்ட வரைபை சமர்ப்பித்தேன்.
நாரா நிறுவனத்தின் அதிகாரத்தை நீதியமைச்சர் கைப்பற்ற முயற்சிப்பதாக பிரதான பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இது முற்றிலும் தவறானது.நாராவின் அதிகாரத்தை நான் கைப்பற்றி ஒன்றும் செய்ய போவதில்லை.இழக்கப்படும் வருமானத்தை முறையாக பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனே சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM