பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வாகனதரிப்பிடத்தில் இருந்த மரம் ஒன்று மழைக்காரணமாக சரிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவத்தின் போது அவ்வாகனதரிப்பிடத்தில் பல வாகனங்கள் தரித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த மரம் சரிந்து விழ வாய்ப்புள்ளதை உணர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர்  விடுத்த எச்சரிக்கையினை தொடர்ந்து அவ்விடத்திலிருந்த வாகனங்கள் முற்றாக அகற்றப்பட்டுள்ளது.

மரம் சரிந்து விழ சிறு நொடிகள் இருக்கும் வேளையில் அம்மரத்தின் அருகில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்று அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி எச்சரிக்கை செய்யாவிடின் பாரிய சேதம் நிகழ்ந்திருக்கும் என்று அச்சமயத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.