ஆடுகளுக்கு நடுவே : பிரித்விராஜ் நடிக்கும் 'ஆடு ஜீவிதம்' புதிய போஸ்டர்

Published By: Nanthini

08 Nov, 2023 | 04:30 PM
image

மலையாளத்தின் முன்னணி நடிகரும் 'மொழி', 'ராவணன்', 'சத்தம் போடாதே' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவருமான பிரித்விராஜ்,  தற்போது மலையாள மொழியில் உருவான 'ஆடு ஜீவிதம்' படத்தில் நடித்துள்ளார். 

பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் பிளஸ்சி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். 

படத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.

சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்று, அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞனை பற்றிய கதையை கொண்டமைந்த இந்த படத்தில், பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்திருக்கிறார். 

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

'ஆடு ஜீவிதம்' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானதையடுத்து, படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

ஆடுகளுக்கு நடுவில் நீளமான முடி மற்றும் தாடியுடன் பிரித்விராஜ் இருக்கும் காட்சி இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளமை ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருப்பதோடு, சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட இசக்கி கார்வண்ணனின்...

2026-02-11 17:06:41
news-image

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை...

2026-02-10 16:29:10
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ்

2026-02-10 16:12:04
news-image

இசை ரசிகர்களை கவர்ந்து வரும் 'ஜில்லே...

2026-02-10 16:01:45
news-image

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட...

2026-02-10 15:32:39
news-image

மசாலா மணத்துடன் மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா...

2026-02-09 18:38:44
news-image

அன்பையும், நம்பிக்கையையும் பற்றி உரக்கப் பேசும்...

2026-02-09 18:33:43
news-image

பிரேக் -அப் கலாச்சாரத்தின் பின்னணியை சுவராசியமாக...

2026-02-09 18:27:19
news-image

டி.இமான்- சீனுராமசாமி - லெனின் பாரதி...

2026-02-09 15:06:38
news-image

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்'...

2026-02-07 15:05:35
news-image

ரீ ரிலீஸாகும் டி. ராஜேந்தரின் 'உயிருள்ள...

2026-02-07 15:00:47
news-image

நடன இயக்குநர் ஸ்ரீதர் நடனமாடும் '99/66'...

2026-02-07 14:18:22