கேப்பாபுலவு பிளக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள   விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி அதனை விடுவிக்க வேண்டுமெனகோரி  இன்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராடடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குறித்த போராடடக்களத்துக்கு வருகைதந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டனர்.

இராணுவ  மக்களின் காணிகளில் எந்தவிதமான இராணுவ கட்டமைப்க்புக்களும் இல்லாததை அவதானித்த  ஆணைக்குழுவின் மக்களின் பயன்தரு மரங்கள் மற்றும் வீடுகள் போன்றன அழிக்கப்பட்டிருந்ததையும் பார்வையிட்ட்னர்.

இதனை தொடர்ந்து மக்களிடம் கருத்து தெரிவித்த மனித உரிமை ஆணைக்குழுவின் இந்த மக்களின் அடிப்படை வாழ்விட உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் ஆராய்வதாகவும் தம்மால் மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள  விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக  கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும்  பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள் முதியவர்கள், இபெண்கள் என  அனைவரும்  கடந்த 31.01.2017 தொடக்கம் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றனர்.

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84குடும்பங்களுக்கு சொந்தமான 50ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள விமானப்படையினர் அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள்  செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாபுலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்திருந்தமக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகைதந்திருக்கவில்லை நீந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து  வைக்கும் வரை போராட்டம்  தொடருமென கூறி தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு இன்றும் பல பிரதேசங்களில் இருந்து மக்களும், சிவில் அமைப்புகளும் வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடியதோடு பல உதவிகளையும் வழங்கி சென்றதோடு  மக்களுக்கான ஆதரவும் பல்வேறு வழிகளில் அதிகரிப்பதை அவதானிக்க முடிகின்றது. 

இந்தப்போராட்டக்   களத்தில் உள்ள மாணவர்கள் வீதி ஓரத்திலேயே தமது பாடசாலையில் வழங்கப்பட்ட  வீட்டு வேலைகளை செய்வதோடு அனைவரும் இணைந்து தமது  கல்விநடவடிக்கைகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது.

மேலும் இன்றும் ஆசிரியர்கள் இணைந்து போராட்ட  களத்திலே உள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளையும் உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும்   மேற்கொண்டனர்.

போராடத்தில் ஈடுபடும் மக்களுக்கான உணவு  மற்றும் இதர உதவிகளை அயல் கிராம மக்களும் இளைஞர்களும் சிவில் சமூக அமைப்புகளும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.