கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “BACK TO SCHOOL” மீண்டும் பள்ளிக்குப்போகலாம் நிகழ்வு 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்துக் கல்லூரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு பாடசாலை ஆரம்பிக்கும் நேரமான காலை 7.30 க்கு ஆரம்பமாகியது.

இதேவேளை, காலை ஆராதனை, வகுப்பறை செயற்பாடுகள், பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கின்ற கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக மீண்டும் பள்ளிக்குப் போகலாம் நிகழ்வு அமைந்திருந்தது.

தமிழ் பாடசாலைகளில் முதன்முறையாக நடைபெற்ற இந்நிகழ்வில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.