(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களான சுஜித் பெரேரா மற்றும் ரோகண பண்டார ஆகியோருக்கிடையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவில் மேலும் இரு பெண் எம்.பி.க்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (7) காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடிய நிலையில் இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே இந்த விடயத்தை அவர் அறிவிப்பு செய்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரால் குழுவொன்று நியமி்க்கப்பட்டது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தமைமையில் சமல் ராஜபக்ஷ், ரமேஷ் பத்திரண, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரைக் கொண்ட பாராளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அதுகோரல மற்றும் சீதா அரம்பேபொல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM