இலங்கையில் அப்சீலிங் சாகச விளையாட்டை கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
அப்சீலிங் என்பது உயரமான இடத்திலிருந்து செங்குத்தாக கீழே இறங்க கயிற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தும் சாகச விளையாட்டாகும்.
அப்சீலிங் சாகச விளையாட்டில் பொதுமக்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்பு டிசம்பர் மாத இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் வழங்கப்படலாம் என கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பிரசாத் சமரசிங்க சாகச விளையாட்டில் ஈடுபட தாமரை கோபுரத்திற்கு வருகை தருமாறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரிடம் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தாமரை கோபுரத்திலிருந்து 195 மீற்றர் ஏறி இறங்கும் சாகசத்தில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஈடுபட்டது. பொதுமக்கள் மருத்துவரின் சான்றளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் சாகசத்தை நிகழ்த்த அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், தாமரை கோபுரம் திறக்கப்பட்டு பதினான்கு மாதங்களுக்குப் பிறகு, மொத்தம் 1.35 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளார்கள். அதில், சுமார் 34,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM