களுத்துறை - கட்டுக்குறுந்த கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வருவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதன்படி குறித்த கடற்பிரதேசத்துக்கு 2 டோரா படகுகள், 2 கடற்படை படகுகள் மற்றும் 15 கடற்படை சுழியோடிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று களுத்துறை - கட்டுக்குறுந்த கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.