நன்மைகளை அள்ளித்தரும் நவர அரிசி ; ஆயுர்வேதம் சொல்லும் அற்புத தகவல்கள்!

07 Nov, 2023 | 11:28 AM
image

நவரா அரிசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இந்த அரிசி மூலிகை அரிசி என்று அழைக்கப்படுகிறது.

60 நாளில் விளைச்சலைக் கொடுக்கும் அரிசி என்பதால் இந்த நவரா அரிசிக்கு சஸ்திகா அரிசி என்ற பெயர் உண்டு.

உடலுக்கு பலத்தைக் கொடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பல்வேறு நோய்களிலிருந்து காக்கும் என்பது ஆயுர்வதேச மருத்துவர்களின் கூற்றாகும்.

நவர அரிசியை பேஸ்ட் போல தயாரித்து தோல் புண்கள், சொரியாசிஸ் போன்ற நோய்களை குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

உடம்பில் உள்ள கழிவுகளை நீக்கி புத்துணர்ச்சி தர இது பெரிதும் உதவுகிறது.

செர்விகல் ஸ்பான்டிலைசோஸிஸ், முதுகு வலி, பக்கவாதம், ருமட்டாய்ட் ஆர்த்திரைட்டிஸ் ஆகியவற்றுக்கு இது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் உணவு அரிசிக்கு பதிலாக நவரா அரிசியை பயன்படுத்துவது நல்லது.

மெலிந்த உடல் வாகு கொண்ட குழந்தைகளுக்கு வேக வைத்த நவரா அரிசியைக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு எடை கூடுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் இது மிகவும் சத்தான உணவாக கருதப்படுகிறது. வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக வளர இது உதவுகிறது.

நவராவில் வைட்டமின் சியும் நிறைய உள்ளது. ரத்தத்தில் ஆர்பிசியை அதிகரிக்கவும், அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கவும் இது உதவுகிறது.

நவரா அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் சஸ்திகா தைலம் நரம்பியல் தசை கோளாறுகளை சரி செய்ய  பயன்படுத்தப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49
news-image

சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் இரைப்பை குடல்...

2024-09-17 10:24:41
news-image

செப்சிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-09-14 16:45:08
news-image

பி சி ஓ டி பாதிப்பு...

2024-09-14 16:14:37
news-image

ஹெபடோசெல்லுலர் கார்சினோமா எனும் கல்லீரல் புற்றுநோய்...

2024-09-12 16:42:06
news-image

தசை வலியை கண்டறியும் பரிசோதனை -...

2024-09-11 17:22:29
news-image

ஒரு பக்க காது கேளாமைக்கான நவீன...

2024-09-10 15:44:35
news-image

மூளையின் ஏற்படும் கட்டியை அகற்றும் நவீன...

2024-09-09 16:00:44
news-image

ஹெமிபிலீஜியா பாதிப்புக்கான நவீன இயன்முறை சிகிச்சை

2024-09-06 14:33:15
news-image

வளர்ச்சியடைந்து வரும் மரபணு மருத்துவம்

2024-09-04 17:47:30
news-image

புற்றுநோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-09-03 15:08:20
news-image

மேல் சுவாச குழாய் தொற்று பாதிப்பிற்குரிய...

2024-09-02 20:27:20