இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச் சந்திப்பு இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த சனிக்கிழமை இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை - இந்திய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான உத்தியோகப்பூர்வமானதும் முக்கியமானதுமானதாக வெளிவுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கரின் விஜயம் அமைந்துள்ளதுடன் இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ளப்பட உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்துதல் மற்றும் திருகோனமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து இந்த வியத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்படும் எனும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.