இலங்கை அச்சுத் துறையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அச்சுக் கண்காட்சி மற்றும் விருதுகள் இரவு நிகழ்வு அக்டோபர் 27 அன்று நடைபெற்றது. உலகளாவிய ரீதியில் மிகச் சிறந்த அச்சுத் தரத்தினைக் காட்டும் தயாரிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பொதியிடல் (பெக்கேஜிங்) தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதியில் உலகத் தரம் வாய்ந்த அதன் தயாரிப்புகளுக்காக மாஸ்டர் பிரிண்டர் விருது உட்பட, 24 பதக்கங்களைப் பெற்று அன்றைய நிகழ்வின் மிகப்பெரிய வெற்றியாளராக பிரிண்ட்கெயார் பிஎல்சி சாதனை படைத்தது.
அடுத்தபடியாக, Softwave Printing & packaging நிறுவனம் 14 பதக்கங்களையும் Austriya Printers நிறுவனம் 6 பதக்கங்களையும் சுவீகரித்துக் கொண்டன.
இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் சமர்ப்பித்திருந்த உயர்தர தயாரிப்புக ள் இலங்கையின் அச்சுத் துறை உலகளாவிய ரீதியில் பிரமிக்கத்தக்க மட்டத்துக்கு உயர்வடைந்திருப்பதற்கு சான்றாக அமைந்திருந்தன.
இலங்கை அச்சகர்கள் சங்கத்தின் தலைவர் அனில் காரியவசம்
வெற்றியாளர்களைப் பாராட்டி உரையாற்றும்போது, " இலங்கை அச்சுத் த் துறை பிரமிக்கத்தக்க அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதை இந்த விருது வழங்கும் நிகழவில் நாம் கண்கூடாக பார்த்து மகிழ்கின்றோம்.
இங்கு இலங்கை அச்சு சமூகத்தின் திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன
இன்று நாடு முழுவதும் 4000 அச்சகங்களில் 300,000 க்கும் அதிகமானோர் வேலை செய்யும் வெற்றிகரமான தொழில்துறையொன்று உருவாகியுள்ளது” என்றார். இலங்கை அச்சுத்துறையை அரசாங்கம் ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
உள்நாட்டு அச்சுத் துறையானது அதன் முழு அளவிலான தேவைகளை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்வதன் மூலம் வெளிநாட்டு விநியோகங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்
பாதுகாப்பு லேபிள்களுக்கு போதுமான திறமை எம்மிடம் இருக்கும் போது அவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருக்கும் சம்பவமொன்று அண்மையில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது கவனிக்கத்தக்கது.
வருடாந்திர கண்காட்சி மற்றும் விருது இரவு தொழில்துறைக்கு ஒரு தளத்தை வழங்கியிருக்கிறது. தொழில் வல்லுநர்கள், நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், தங்கள் அனுபங்களையும் திறன்களையும் வெளிப்படுத்தவும் இங்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM