தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 6 ஆம்  திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா முன்னிலையில் அவரை இன்று (20) ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.