தீபாவளி ஸ்பெஷல் : நெய்யப்பம்

Published By: Nanthini

06 Nov, 2023 | 04:00 PM
image

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப் 

வெல்லம் - 1 கப் 

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன் 

கறுப்பு எள் - 1 டீஸ்பூன் 

சீவியெடுத்த சிறு தேங்காய்த் துண்டுகள் - 1 டேபிள்ஸ்பூன்

பொறிக்க : தேவையான அளவு நெய்

செய்முறை 

பச்சரிசியை நன்கு கழுவி 3 மணிநேரம் ஊறவைக்கவும். 

பின்னர், பச்சரிசியில் வெல்லம் கரைத்த தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் குருணை குருணையாக, கொரகொரப்பான மாவாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

பின்பு, ஒரு கடாயில் தேங்காய் துண்டுகளை ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு வறுத்து, அதையும்  மாவில் சேர்க்கவும்.

பின்னர், கொஞ்சம் கறுப்பு எள் சேர்த்து நன்கு கலந்து, ஒரு பௌலுக்கு மாற்றி, இரவு முழுதும் அல்லது 8 மணிநேரம் மூடி வைக்கவும்.

வாணலியை ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி, அது சூடானதும், அரைத்து தயாராக வைத்துள்ள மாவை நன்கு கலந்து, ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து, சூடான நெய்யில் ஒரே இடத்தில் ஊற்றவும். 

பின்னர், அந்த மா உருண்டை வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.

நெய்யை மிதமான சூட்டில் வைக்கவும். இல்லையேல், அப்பம் விரைவில் கறுப்பாக மாறிவிடும். நெய்யை மிதமான சூட்டில் வைத்து நன்கு பொரித்தெடுத்தால் சுவையான, மொறு மொறு நெய்யப்பம் தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right