களுத்துறை வடக்கு பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 3

06 Nov, 2023 | 04:03 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்றுமுன்தினம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

54 வயதான  பெல்பொல, பரகஸ்பிட்டிய  பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

களுத்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக களுத்துறை, எலமோதர ஆற்றில் கை மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது உயிரிழந்தவர்.

54 வயதுடைய பெல்பொல, பரகஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

உயிரிழந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பதாக குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற மத வழிபாடு நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இளைஞர்கள் இருவர் அவரை தாக்கியுள்ளனர்.

இலங்கை கடற்படையில் பணிபுரிந்து அதிலிருந்து விலகிய 24 வயதுடைய இளைஞரும், 18 வயதுடைய மற்றுமொரு இளைஞருமே இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும் தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் தாக்குதலுக்கும்  அவரின் மரணதுக்கும்  இடையில் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07