இந்தியாவில் கேரளாவில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது எஜமானர் இறந்தது தெரியாமல், வைத்தியசாலை சவக்கிடங்கின் நுழைவு வாயில் முன்பு பழுப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த நாய் ஒன்று கடந்த 4 மாதங்களாக காத்துக் கிடக்கிறது.
இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத ஒருவரை உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அவர்களுடன், அந்த நபர் வளர்த்த நாயும் வந்துள்ளது.
இதனிடையே, சிகிச்சை பலனின்றி அந்த நபர் இறந்ததும் அவருடைய உடல் அங்குள்ள சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அதை அவர்கள் மற்றொரு வாசல் வழியாக எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்துள்ளனர். இதை அறியாத அவருடைய வளர்ப்பு நாய், சவக்கிடங்கு வாசலில் கடந்த 4 மாதமாக காத்துக் கிடக்கிறது. இதை, வைத்தியசாலை ஊழியர் ராஜேஷ் என்பவர் கவனித்துள்ளார்.
முதலில் சில நாட்களாக அந்த நாய் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதன்பின்னர், சிலர் வழங்கும் பிஸ்கட் மற்றும் இதர உணவுகளை சாப்பிட்டு, தனது எஜமானர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் சவக்கிடங்கு அருகே காத்துக் கிடக்கிறது.
மேலும், மற்ற தெரு நாய்களுடன் அந்த நாய் சேராமல், அருகில் உள்ள பிசியோதெரபி கட்டடத்துக்கும் சவக்கிடங்குக்கும் மாறி மாறி சென்று வருகிறது. தற்போது அந்த நாய்க்கு, அந்த வைத்தியசாலையின் வைத்தியர் மாய கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து வழங்குகிறார்.
“முட்டை, மீன் மட்டும் அந்த நாய் விரும்பி சாப்பிடுகிறது. அதிகமாக சாதம் சாப்பிடுவதில்லை. அந்த நாய்க்கு ராமு என வைத்தியர் மாய கோபாலகிருஷ்ணன் பெயர் வைத்துள்ளார். அந்த நாயை வளர்க்க கண்ணூரைச் சேர்ந்த பெண் ஒருவர் முன்வந்துள்ளார்” என்று மாய கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM