இயற்கையாய் கட்டிய தேன் கூட்டிலிருந்து கிடைப்பதும், தரமான தேனீ வளர்ப்பு முறையின் (Apiculture) மூலம் கிடைப்பதும் ஒரிஜினல் தேன். (apiculture முறையில் கிடைக்கும் சுத்தமான தேன் பல்வேறு காரணங்களால் இயற்கையாய் கிடைக்கும் மலைத்தேனுக்கு அடுத்த இடத்தில்தான் இருக்கிறது என்றாலும், ஆரோக்கியத்துக்கு நண்பன்தான்!)
கலப்பட வகைகள்
* தேனுடன் வெல்லப்பாகு சேர்ப்பது (அ) முழு வெல்லப்பாகை மட்டுமே கரைத்து விற்பது.
* தேனுடன் தண்ணீர் சேர்ப்பது
* வெள்ளை சர்க்கரை கரைசலுடன் (refined sugar syrup) தேனின் தங்க நிறம் கொடுக்கும் செயற்கைநிறமிகள் (artificial dyes) மற்றும் செயற்கை மணமூட்டிகள் (artificial flavours) சேர்த்த போலி தேன்.
முதல் இரண்டு வகையான தேன்களும் தரம் குறைந்தாலும் உடலுக்குக் கெடுதல் இல்லை. மூன்றாம் வகை தேனிடம் நீங்கள் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க எளிதாய் சில டிப்ஸ் இங்கே...
எளிய சோதனைகள்
* நீருள்ள கண்ணாடி டம்ளரில் சிறிதளவு தேனை ஊற்றும்பொழுது தேன் உடனே கரையாமல் விழுது போல் டம்ளரின் அடியில் இறங்கினால் அது நல்ல தேன். அல்லாமல், தேன் உடனே கரைந்து நீர் கலங்கினால் அது கலப்பட தேன்.
* தேனில் உள்ள நீர் அளவு (moisture) கூடுதலாக இருந்தாலும் ஊற்றப்பட்ட தேன் டம்ளரின் அடியில் சென்று சேரும் முன்னரே கரையும்.
* தீக்குச்சியின் மருந்துப் பகுதியை தேனில் நனைத்து உடனே தீப்பெட்டியில் உரச, உடனடியாய் தீப்பற்றினால் அது சூப்பர் தேன்!
* கட்டை விரலில் ஒரு சொட்டு தேன் விடும்பொழுது, அது பரவி, கீழே சிந்தினால் உஷார்! அது மூன்றாந்தரம். தரமான ஒரிஜினல் தேன் சொட்டு பரவாது என்பதுதான் உண்மை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM