தீபாவளிக்கு 2 மணித்தியாலங்கள் மாத்திரமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி

06 Nov, 2023 | 03:02 PM
image

சி.சி.என்

தமிழர்களின் பண்டிகையான தீபாவளிக்கு பட்டாசு வெடித்து மத்தாப்பு கொளுத்தி மகிழ்ச்சியாக நாளை கொண்டாடுவர் தமிழர்கள். இந்நிலையில் அதிக பட்டாசுகள் வெடித்தால் சூழல் பாதிக்கப்படும் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 

வழக்குகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றமானது தீபாவளி தினத்தன்று 2 மணித்தியாலயங்கள் மாத்திரமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கியது.

இதை தீபவாளியை கொண்டாடும் எல்லா மாநில அரசுகளும் கடந்த வருடம் கடைபிடித்தன. இவ்வருடமும் அவ்வாறே செயற்படுவதற்கு அவை தீர்மானித்துள்ளன.

சுமார் ஏழரை கோடி தமிழர்கள் வாழ்ந்து வரும் தமிழ் நாட்டில் தீபாவளி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. 

தமிழகத்தின் தலைநகர் எனக் கூறப்படும் சென்னையை சூழவுள்ள பிரபலமான ஆடையகங்களில் கூட்டம் அலை மோத ஆரம்பித்துவிட்டது. புத்தாடை, பலகாரங்கள், பயணம், உறவினர் சந்திப்பு, ஆலய வழிபாடு இவற்றில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாக பட்டாசு வெடித்தல், மத்தாப்பு கொளுத்துதல் ஓர் அங்கமாகவே தமிழர்களின் தீபாவளி தின கொண்டாட்டங்களில் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில், 2 மணித்தியாலயங்கள் மாத்திரமே பட்டாசு வெடிக்கலாம் என்ற விடயம் இவர்களுக்கு சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசானது பட்டாசு வெடிக்கும் நேரத்தையும் அறிவித்துள்ளது. அதன்படி 12ஆம் திகதி தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் அன்றைய தினம் மாலை இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் கொளுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பின்படி காற்று மாசடையாதவாறு பசுமை பட்டாசுகளை தயாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த பசுமை பட்டாசுகள் ஏனையவை போலவே சத்தம் கேட்கும். ஆனால் இதிலிருந்து வெளியாகும் புகையினால் சூழலுக்கு அதிகளவு மாசு ஏற்படாது. நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் 9 மாத ஆராய்ச்சிகளின் பின்னரே இந்த பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன அமைப்பான நீரி, 28 அறிவியலாளர்கள் குழுவை அமைத்து 9 மாத ஆராய்ச்சிக்கு பின்னர், புதிய இரசாயன சேர்க்கை சூத்திரத்தை கண்டுபிடித்தது.

நைட்ரஜன் மற்றும் கந்த வாயுக்களை குறைக்கும் வகையிலும் பசுமை பட்டாசுகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாதாரண பட்டாசுகளில் இருந்து வெளிவரும் மாசுவை காட்டிலும் பசுமை பட்டாசுகளில் இருந்து வெளிவரும் மாசு 30 முதல் 50 வீதம் குறைவாக இருக்கும் என நீரி அமைப்புதெரிவித்துள்ளது.

பசுமை பட்டாசோ சாதாரண பட்டாசோ... ஆனால் 2 மணித்தியாலங்கள் மாத்திரம் பட்டாசு வெடிப்பது தமக்கு அசாதாரணமான விடயம் என தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் அதிருப்திகள் எழுந்து வருகின்றன.

எனினும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பதால் சட்டத்தை கடை பிடிக்கவேண்டிய கட்டாயமாக இருக்கின்றது. ஆனால் ஆளும் திராவிட  முன்னேற்ற கழக அரசு நாத்திக கொள்கையை பின்பற்றுவதால் இவ்விடயத்தில் சமய நம்பிக்கை உள்ள தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது என்ற கண்டனங்களும் கடந்த ஐந்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எவரும் தொடர்ந்து 2 மணிநேரம் வெடிக்கும் அளவு பட்டாசு வாங்க மாட்டார்கள். அதையும் அனைவரும் ஒரே நேரத்தில் தொடர்ந்து வெடிக்க மாட்டார்கள்.

அவ்வப்போது 10 அல்லது 20 நிமிடங்கள்தான் வெடிப்பார்கள். நாள் முழுவதும் பரவலாக தங்களுக்கு சமயம் வாய்க்கும் போது வெடிப்பார்கள். ஆனால் இப்போது தமிழக அரசு எல்லோரையும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க சொல்கிறது. எந்த முறை சிறந்ததென்று அறிவாலயங்களில் அமர்ந்துதான் யோசிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.

இது ஒரு கொண்டாட்டம் மாத்திரமே. இதனால் சுற்று சூழலுக்கு மாசு என்கிறார்கள். ஆனால் 24 மணித்தியாலமும் தமிழக அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளதே... அது எவ்வளவு பெரிய பாதிப்பு என மதுபானத்துக்கு எதிரானவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தமிழக அரசுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக 24 மணிநேரமும் குடிக்க சொல்லும் அரசு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறி வருடத்துக்கு ஒரு முறை வருமானத்தை பார்க்கக்கூடிய பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது என புதுவை மாநில பாட்டாளி உழவர் பேரியக்கம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் பட்டாசு நகரம் என அழைக்கப்படும் சிவகாசியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் கடந்த ஐந்து வருடங்களாக விற்பனை வீழ்ச்சியடைந்தமைக்கு இந்த கட்டுப்பாடுகளே காரணம் என்பது முக்கிய விடயம்.

எது எப்படியானாலும் தமிழக அரசு அறிவித்துள்ள நேரத்துக்கு மேலே பட்டாசு வெடித்தாலும் அதை கட்டுப்படுத்துவது என்பது சவாலான விடயம்தான். இதேவேளை தமிழகம் உட்பட கர்நாடகா மற்றும் ஏனைய மாநிலங்களிலும் இரண்டு மணித்தியாலயங்கள் மாத்திரமே பட்டாசு வெடிக்கலாம் என குறித்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதற்கான நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 03:57:33
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56