டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில்  பேஸ்வர் சல்மி அணியை எதிர்கொண்ட கராச்சி கிங்ஸ் அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  கராச்சி அணி 4 விக்கட்டுளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

இதில் மலிக் 51 ஓட்டங்களையும், பாபர் அஷாம் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

175 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பேஸ்வர் சல்மி அணி 165 ஓட்டங்களை பெற்று 9 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பேஸ்வர் சல்மி  அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அப்ரிடி  28 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக  54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக மலிக் தெரிவுசெய்யப்பட்டார்.