பிபிசி
மேற்குநேபாளத்தின் தொலைதூர மலைப்பகுதிகளில் பூகம்பத்தில் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிருக்கு மத்தியில் இரவு நேரங்களில் வீதியோரங்களிலும் கூடாரங்களிலும் உறங்குகின்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.
பூகம்பம் காரணமாக 157 உயிரிழந்துள்ளதுடன் 300 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்புநடவடிக்கைகள் முடிவிற்கு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடற்றவர்களிற்கு தங்குமிடங்களை வழங்குவது அத்தியாவசிய உதவிகளை வழங்குவது குறித்தே கவனம் செலுத்திவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தங்களிடம் போதிய கூடாரங்கள் இல்லை என பிபிசியிடம் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கானவர்கள் கடும் குளிரின் மத்தியில் வீதியோரங்களில் அல்லது கூடாரங்களில் இரவுகளை கழிக்கின்றனர்.
நாங்கள் இந்த நிலைமையின் கீழ் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளோம் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் உணவோ தங்குமிடமோ இல்லை எங்கள் சகோதரி எங்களை விட்டுவிட்டு போய்விட்டார்எங்களிற்கு உதவி தேவை என பூகம்பத்தில் சகோதரியை இழந்த ஒருவர் தெரிவித்தார்.
பூகம்பத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட இரு பகுதிகளில் ஜஜர்கோட் - ருக்பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுகின்றது.
பயங்கரமான அனுபவங்கள் ஆச்சரியமளிக்கும் விதத்தில் உயிர்பிழைத்தமை குடும்பத்தில் பலரை இழந்தமை போன்ற கதைகள் வெளியாகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM