இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஆரோன் பின்ச்சை “பின்சி மச்சாங்” என சிங்களத்தில் அழைத்தமை பார்வையாளர்களை குதுகலப்படுத்தியுள்ளது.

வீரர்கள் மைதானத்தில் விளைாடிக்கொண்டிருந்தவாறு, வர்ணனையாளர்களிடம் உரையாடுவது தற்போதைய இருபதுக்கு-20 போட்டிகளில் சகஜமாகி வருகிறது.

இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது இவ்வாறு உரையாடும் போதே ரசல் ஆர்னல்ட் , பின்சை “பின்சி மச்சாங், இட்ஸ் ரசல், கோஹமத?” என அழைத்துள்ளார்.

இதற்கு ஆரோன் பின்ச் “ஹலோ மச்சான்”  என கூறி குதுகலத்தை அதிகரித்துள்ளைமை கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.