பலஸ்தீனம் : போரும் தீர்வும்

Published By: Vishnu

05 Nov, 2023 | 07:00 PM
image

சண் தவராசா

காஸாவில் போர் நிறுத்தம் என்ற பேச்­சுக்கே இட­மில்லை எனத் திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­துள்ளார் இஸ்­ரே­லியத் தலைமை அமைச்சர் பெஞ்­சமின் நெத்­தன்­யாஹு. உலகின் அநேக நாடு­களின் தலை­வர்கள் உட­னடிப் போர் நிறுத்­தத்­துக்கு அழைப்பு விடுத்­துள்ள போதிலும் அவர்­களின் வேண்­டு­கோளை - வழக்கம் போன்றே - அவர் அசட்டை செய்­துள்ளார்.

அதே­நேரம் இஸ்­ரேலின் நட்பு நாடு­க­ளான மேற்­கு­லக நாடுகள், காஸா மக்­க­ளுக்கு அவ­சர தேவை­களை நிறை­வேற்றும் நோக்­குடன் மனி­தா­பி­மான மோதல் நிறுத்­தத்­துக்கு விடுத்த அழைப்பைக் கூட நெத்­தன்­யாஹு கவ­னத்தில் கொள்­ள­வில்லை. ‘எ­டுத்த காரி­யத்தை முடித்தே தீருவேன்’ என்ற பாணியில் காஸா மீதான தாக்­கு­தல்­களை இடை­வி­டாது தொடர்­வது என்ற மூர்க்­கத்­த­னத்­துடன் இஸ்­ரே­லிய அரசு நடந்து கொள்­வதைப் பார்க்க முடி­கின்­றது.

தற்­போ­தைய மோதல் ஆரம்­ப­மாகி ஒரு மாதம் ஆகின்­றது. இந்த ஒரு மாத காலத்தில் இஸ்­ரே­லியப் பொது­மக்கள், படை­யினர் எனக் கொல்­லப்­பட்­ட­வர்­களைப் போன்று பல மடங்கு பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டனர். மோதல் தொடரும் பட்­சத்தில் கொலை­யா­கு­வோரின் எண்­ணிக்கை இன்­னமும் பல மடங்கு அதி­க­ரிக்கும் என நிச்­சயம் நம்­பலாம். வலி­மை­யான உலக நாடுகள் நினைத்தால் மாத்­தி­ரமே இந்த மோதல் இப்­போ­தைக்குத் தணியும் என்ற நிலையே உள்­ளது.

ஆனால், அமெ­ரிக்கா உள்­ளிட்ட இஸ்­ரே­லிய ஆத­ரவு நாடுகள் மோதல் நீடிப்­ப­தையே விரும்­பு­கின்­றன என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. பலஸ்­தீனப் பொது­மக்கள் எத்­தனை பேர் கொல்­லப்­பட்­டாலும் பர­வா­யில்லை, ஹமாஸ் அமைப்­பினர் ஒடுக்­கப்­பட வேண்டும் என்­பதே அவர்­களின் நிலைப்­பா­டாக உள்­ளது.

ஆனால், இஸ்ரேல் அர­சி­னதும், அமெ­ரிக்கா உள்­ளிட்ட அத­னது நட்பு நாடு­க­ளி­னதும் எண்ணம் இல­குவில் நிறை­வே­றுமா?

மக்கள் மத்­தியில் மறைந்­து­வாழும் கெரில்­லாக்­களை தனி­யாக இனங்­கண்டு வேட்­டை­யா­டு­வது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. அதிலும் கெரில்­லாக்கள் மக்கள் அபி­மானம் பெற்­ற­வர்­க­ளாக விளங்­கினால் அவர்­களை இனங்­கண்டு அழிப்­பது மிகவும் கடி­ன­மாகி விடும். காஸா நில­வரம் அத­னையே உணர்த்­து­கி­றது.

காஸா பிராந்­தியம் மீது இடை­ய­றாத தாக்­குதல் தொடர்­கின்ற போதிலும், மக்­களை குறிப்­பிட்ட பிர­தே­சத்தில் இருந்து வெளி­யே­று­மாறு இஸ்­ரே­லியப் படைத்­துறை அச்­சு­றுத்தி வரு­கின்ற போதிலும், உணவு, குடிநீர், மின்­சாரம், மருத்­துவ வசதி, எரி­பொருள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய தேவை­களை மறுத்து வரு­கின்ற போதிலும், தங்கள் பூர்­வீக வாழி­டங்­களை விட்டு வெளி­யேற மக்கள் மறுத்து வரு­கின்­றனர்.

அதே­வேளை, தரை­வழித் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­துள்ள இஸ்­ரே­லியப் படைகள் பலத்த எதிர்த் தாக்­கு­தல்­க­ளையும் எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. நவீன வகை ஆயு­தங்கள் இஸ்­ரே­லியப் படை­யினர் வசம் மட்­டு­மன்றி, ஹமாஸ் அமைப்­பினர் வசமும் உள்­ளன. நீண்­ட­தூர எறி­க­ணைகள், ட்ரோன் எனப்­படும் சிறி­ய­ரக ஆளில்லா விமா­னங்கள் என சண்டைக் களம் நவீன வகை ஆயு­தங்­களால் நிரம்பி வழி­கின்­றது.

போதாக்­கு­றைக்கு ஹமாஸின் நண்­பர்­களும் இஸ்ரேல் மீது  தாக்­கு­தல்­களை நடத்தத் தொடங்­கி­யுள்­ளனர். லெப­னானில் உள்ள ஈரான் ஆத­ரவு ஆயுதக் குழு­வான ஹிஸ்­புல்லா ஆரம்பம் முதலே இஸ்­ரே­லிய இலக்­குகள் மீது தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது. அயல்­நா­டான சிரி­யாவில் இருந்தும் எறி­க­ணைகள் ஏவப்­பட்­டுள்­ளன. தற்­போது, யேமன்    நாட்டில் உள்ள ஹவுத்தி அமைப்பும் ட்ரோன் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­துள்­ளது.

இதே­வேளை, இஸ்ரேல் அர­சுக்கு நேர­டி­யாக ஆத­ரவு வழங்­கி­வரும் அமெ­ரிக்­காவின் நிலைகள் ஈராக்­கிலும், சிரி­யா­விலும் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி வரு­கின்­றன. ஒக்­டோபர் நடுப்­ப­குதி முதல் 23 தட­வைகள் இவ்­வாறு தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. இந்த நாடு­களில் செயற்­பட்­டு­வரும் ஈரான் ஆத­ரவு ஆயுதக் குழுக்­களே அமெ­ரிக்கப் படை­யி­னரை இலக்கு வைத்துத் தாக்­குதல் நடத்­து­வ­தாகக் குற்­றஞ்­சாட்டும் அமெ­ரிக்கா, இது தொடர்பில் ஈரா­னுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

காஸா மோதல் ஆரம்­ப­மா­னதன் பின்­னான காலப்­ப­கு­தியில் ஈரான் மீது தொடர்ச்­சி­யாக அமெ­ரிக்கா விடுத்­து­வரும் எச்­ச­ரிக்­கைகள் தொடர்பில் ஈரா­னிய அரசுத் தலைவர் இப்­ராஹிம் இப்­ராஹிம் ரைசி­ க­டந்த ஞாயிற்றுக் கிழமை பதி­லொன்றை வழங்­கி­யி­ருந்தார். ' வொஷிங்டன் எங்­களை எதுவும் செய்ய வேண்டாம் எனச் சொல்­கி­றது.

ஆனால் அவர்கள் இஸ்­ரே­லுக்கு பாரிய உத­வி­களை வழங்கி வரு­கி­றார்கள். இஸ்ரேல் சிவப்புக் கோட்டைக் கடந்து விட்­டது, அது ஒவ்­வொ­ரு­வ­ரையும் நட­வ­டிக்கை எடுக்கத் தூண்டுகிறது.' இந்த வாச­கங்கள் சொல்லும் செய்தி அபா­ய­க­ர­மா­னது. தற்­போ­தைய மோதலில் நேர­டி­யாகக் கள­மி­றங்க அல்­லது தனது ஆத­ரவு அமைப்­பு­களைக் கள­மி­றக்க ஈரான் முடிவு செய்­து­விட்­டதை அவை உணர்த்­து­கின்­றன.

அதே­போன்று, சிரியா மீதான தாக்­கு­தல்­களை நிறுத்திக் கொள்­ளு­மாறு இஸ்­ரேலை ரஷ்யா கேட்டுக் கொண்­டுள்­ளது. சிரி­யாவின் தலை­நகர் டமஸ்கஸ் மற்றும் அலப்போ நக­ரங்­களில் உள்ள விமான நிலை­யங்­களை இலக்­கு­வைத்து இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தல்கள் கார­ண­மாக அந்த விமான நிலை­யங்கள் தற்­கா­லி­க­மாகச் செய­லி­ழந்து உள்­ளன. சிரி­யாவில் ரஷ்யப் படைகள் அர­சுக்கு ஆத­ர­வாக நிலை­கொண்­டுள்ள நிலையில் ரஷ்யா விடுத்­துள்ள வேண்­டுகோள் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டி­ய­தா­கின்­றது.

காஸா மோதல் உட­ன­டி­யாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­ப­டா­து­விட்டால் அது பிராந்­திய மோத­லாக மாறும் அபா­யமே உள்­ளது. அதனை உலகம் தாங்­குமா? ஐரோப்­பாவின் ஒரு மூலையில் ஒரு வரு­டத்­தையும் கடந்து நடை­பெற்று வரும் உக்ரேன் போர் உல­க­ளா­விய பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்­கத்தைச் சமா­ளிப்­ப­தற்கே உலகம் திணறி வரு­கின்­றது. அதற்­கி­டையில் மற்­றொரு மோதல் அதுவும் பெற்­றோ­லிய உற்­பத்திப் பிராந்­தி­யத்தில் ஏற்­ப­டு­மானால் உலகப் பொரு­ளா­தாரம் என்­ன­வாகும்?

காஸா மோதல் தொடரும் நிலையில் பலஸ்­தீன விடு­தலை அமைப்­புடன் செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டை­யி­லான ‘இரு நாடு’என்ற தீர்வை அமுல்­ப­டுத்த வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது என உல­க­ளா­விய அடிப்­ப­டையில் குரல்கள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளன. காஸாவில் நடை­பெறும் மோதல்­களில் அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல்கள் இடம்­பெ­று­வதைக் கண்­டித்து இஸ்­ரே­லு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை தென் அமெ­ரிக்க நாடான பொலி­வியா துண்­டித்­துள்­ளது. அடுத்து வரும் நாட்­களில் இந்தப் பட்­டி­யலில் மேலும் பல நாடுகள் இணையும் அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன.

மறு­புறம், இஸ்­ரே­லுக்­கான தனது தூது­வரை ஜோர்தான் திரும்பப் பெற்­றுள்­ளது. காஸா மோதலை உட­ன­டி­யாக முடி­வுக்குக் கொண்­டு ­வர அரபு உலகம் தீவிர நட­வ­டிக்­கைகள் எத­னையும் மேற்­கொள்­ள­வில்லை என்ற விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டு­வரும் சூழலில் ஜோர்­தானின் முடிவு இஸ்­ரே­லுடன் ராஜ­தந்­திர உற­வு­களைப் பேணி­வரும் ஏனைய அரபு நாடு­க­ளையும் தமது நிலைப்­பாடு தொடர்பில் மறு­ப­ரி­சீ­லனை செய்யத் தூண்டும் என எதிர்­பார்க்­கலாம்.

ஆனால், இந்த விட­யங்கள் எத­னையும் சீர்­தூக்கிப் பார்க்கும் நிலையில் இஸ்­ரேலோ, அந்த நாட்­டுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவரும் அமெரிக்காவோ இல்லை என்பது தௌவாகத் தெரிகின்றது. ஹமாஸுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் முடிவில், ஹமாஸ் இல்லாத காஸாப் பிராந்தியத்தில் பன்னாட்டுச் சமாதானப் படை ஒன்றை நிறுத்துவது தொடர்பிலான ஆலோசனையில் அவை ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

காஸா மோதலுக்கு இராணுவத் தீர்வு ஒன்றே இறுதியானது என்ற நிலைப்பாட்டில் இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் உள்ளதையே இந்தச் செய்தி உணர்த்துகிறது. இந்நிலையில் பலஸ்தீன மக்களுக்குத் தனிநாடு ஒன்றே தீர்வு என நினைக்கும் ஏனைய நாடுகள் என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றன என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும் என நம்பலாம்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடியின் விஜயத்தைத் தொடர்ந்து அநுராதபுரத்துக்கு கிடைக்கவுள்ள...

2025-04-17 18:34:46
news-image

எல்லையின் பேய்கள்: பிள்ளையானின் வன்முறை மரபையும்...

2025-04-17 12:21:24
news-image

பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு...

2025-04-17 04:01:32
news-image

தேசிய மற்றும் மனித பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான...

2025-04-16 21:55:19
news-image

டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக...

2025-04-16 17:26:09
news-image

மூச்சுவிட வாய்ப்பளித்த ட்ரம்ப்; முடிவுக்கு வரும்...

2025-04-16 02:02:55
news-image

பொருளாதார வளர்ச்சிக்காக ஜ.எஸ்.பி . பிளஸ்...

2025-04-15 22:07:17
news-image

நக்சிவான்: நிலத் தொடர்பற்ற சுயாட்சிக் குடியரசு

2025-04-12 16:57:40
news-image

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்...

2025-04-12 16:58:30
news-image

இந்தியாவின் காலடியில் விழுந்துள்ளதா இலங்கை?

2025-04-12 17:05:16
news-image

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

2025-04-12 16:54:29
news-image

அமெரிக்க - சீன வர்த்தகப் போர்

2025-04-12 16:59:30