மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் இடம்பெறும் அத்துமீறிய காணி அபகரிப்பை கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் கால்நடை பராமரிப்பாளர்கள் பயன்படுத்தி வந்த நிலப்பகுதிகளை அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் இருந்து மயிலத்தமடுவுக்கு வருகை தந்த சிங்கள மக்கள், அத்துமீறி காணிகளை அபகரித்து விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், மட்டக்களப்பு கால்நடை பராமரிப்பாளர்களின் கால்நடைகளை தாக்கி அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மயிலத்தமடு மக்கள் வாழ்வாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அதிகூடிய கவனம் செலுத்தி, அத்துமீறிய காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என ச.கீதன் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான நீதி கோரி, 50 நாட்கள் கடந்து கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழ் தேசிய இளைஞர் பேரவை ஆதரவு வழங்குவதாகவும், போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கை குறித்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர் ஆகியோர் சிந்திக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM