மன்னாரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர் நிறைவேற்றுக் குழு கூடியது!

05 Nov, 2023 | 01:14 PM
image

(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்)

ந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதி உயர் நிறைவேற்றுக் குழு கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (5) காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

ரெலோ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான இக்கூட்டத்தில் ரெலோ கட்சி சார்பாக கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கட்சியின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேன், ஈபி.ஆர்.எல்.எப். கட்சி சார்பாக அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், கட்சியின் உப தலைவர் இரா.துரைரட்னம், புளொட் கட்சி சார்பாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், கட்சியின் செயலாளர் ஆர்.ராகவன், தமிழ் தேசிய கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக கட்சியின் தலைவர் சிவநாதன் வேந்தன், கட்சியின் பேச்சாளர் கணேசலிங்கம் துளசி, கட்சியின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் நாகலிங்கம் நகுலேஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கட்சி சார்ந்தும் ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படும், பல்வேறு விடயங்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28