நேபாள பூகம்பம் - கதறியழும் குடும்பத்தவர்கள் உறவுகளை தகனம் செய்வதற்கு தயாராகின்றனர்

Published By: Rajeeban

05 Nov, 2023 | 12:35 PM
image

ரொய்ட்டர்

 

நேபாள பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறல்களுடன் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இறுதிவிடை கொடுக்க தயாராகின்றனர்.

நேபாளம் கடந்த எட்டுவருடங்களில் எதிர்கொண்ட மிகமோசமான பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களுடன் காணப்பட்டனர்.

கூடாரமொன்றில் பத்து உடல்களிற்கு நடுவில் அமர்ந்தபடி இந்து முறைப்படி உடல்களை தகனம் செய்வதற்காக உறவினர்கள் மாலைகளை தயார்செய்தபடி காணப்பட்டனர்.

பல்ஜிட் மகார் தனது ஏழு வயது மகனின் உடலுடன் காணப்பட்டார்.

பூகம்பத்தில் உயிரிழந்த 160 பேரில் இந்த சிறுவனும் ஒருவன்.

250பேர் வரை காயமடைந்துள்ளனர்.

உறக்கத்திலிருந்தவேளை பூகம்பம் தாக்கியவேளை குடும்பத்தின்ஏனைய ஆறு பேரும் அங்கிருந்து தப்பியோடினார்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை என தந்தை தெரிவித்தார்.

2015ம் ஆண்டின் பின்னர் நேபாளாத்தை தாக்கிய மிக மோசமான பூகம்பம் இது - 8 வருடங்களிற்கு முன்னர் நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்தில் 9000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் நகரங்களும் பலவருடங்கள் பழமையான கட்டிடங்களும் தரைமட்டமாகின.ஒரு மில்லியன் வீடுகள் அழிக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை பூகம்பத்தை தொடர்ந்து ஜஜராககோட்டிலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள வீடுகள் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

அல்லது மீண்டும் பயன்படுத்த முடியாதபடி சேதமடைந்துள்ளன.

எனது உடமைகள் அனைத்தும் இடிபாடுகளிற்குள் கிடக்கின்றன என தெரிவித்த மகர் எதுவும் இல்லாதவன் ஆகிவிட்டேன் என்றார்.

முதலில் உயிர் பிழைத்தவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் பின்னர் பாதிக்கப்பட்டவர்களிற்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வோம் காயமடைந்தவர்களிற்கு இலவச கிசிச்சை வழங்கப்படுகின்றது என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பூகம்பத்தின் பின்னர் கட்டிடங்கள் இடிந்து விழும் பாரிய சத்தங்களை கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும் புகைமண்டம் எழுந்தது எங்களால் மூச்சுவிடவோ எதனையும் பார்க்கவோ முடியவில்லை என குடும்ப உறுப்பினர்கள் ஆறுபேரின் உடல்களுடன் காணப்படும் சாந்த பகதூர் தெரிவித்தார்.

அவரது தாயார் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்துவிட்டமை குறித்து அதிர்ச்சியடைந்துள்ளேன் என குறிப்பிட்ட 41 வயது திணை சோள விவசாயியான அவர் தெரிவித்தார்.

இது தாங்கிக்கொள்ள முடியாத துயரம்; ஆனால் எதிர்கொள்ளவேண்டும் வேறு என்ன செய்வது என அவர் தெரிவித்தார்.

ஒரே இடத்திலேயே உடல்களை தகனம் செய்வோம் ஆனால் இந்து முறைப்படி தனித்தனியாக இறுதிநிகழ்வுகள் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10