2017 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரண தர, உயர்தர மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் ஆகியவற்றுக்கான பரீட்சைகள் நடைபெறுவதற்கான திகதிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாடசாலை மாணவர்களுக்கான தேசிய பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் கால அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் கல்விப் பொது தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. குறித்த பரீட்சைக்கான செய்முறை பரீட்சையானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளதுடன் பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
மேலும் இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொது தராதர சாதாரண தர ப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பரீட்சைகளுக்கான செய்முறை பரீட்சைகள் அடுத்த வருடம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரையில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை தினமான பூரணை தினம் ஆகியவைகள் தவிர்த்து குறித்த பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளினது விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 15 ஆம் திகதிவரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM