அதிக டென்ஷனால் ஏற்படும் நரம்பு முறிவு

Published By: Nanthini

04 Nov, 2023 | 06:42 PM
image

தற்போது நிறைய பேர் அன்றாடம் அதிக வேலைப்பளுவால் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். ஒருவர் அளவுக்கு அதிகமாக டென்ஷன் அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போது நரம்பு முறிவு ஏற்படும். நோய்களை விட கொடியதுதான் மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு ஒருவர் உள்ளானால், அது அவரது மன நிலையை பெரிதும் பாதித்து, ஒரு கட்டத்தில் உயிரையே பறித்துவிடும். 

ஒருவர் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்துக்கு உள்ளாகி, நரம்பு முறிவு ஏற்படப் போகிறது என்பதை சில அறிகுறிகள் உணர்த்தும். அவையாவன...

அளவுக்கு அதிகமான மனக் கவலை மற்றும் மன இறுக்கத்தை உணர்கிறீர்களா? குறிப்பாக என்ன செய்தாலும், உங்கள் மனம் அமைதியாகவில்லையா? அப்படியெனில் நீங்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். 

வாய்விட்டு சப்தமாக அழ வேண்டுமென தோன்றுகிறதா? சிலருக்கு மனம் அதிக பாரத்துடன் இருக்கும் போது, வாய்விட்டு அழத் தோன்றும். இப்படி தோன்றினால், அத்தகையவர்களுக்கு நரம்பு முறிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. 

சிலர் தன்னம்பிக்கை, சுயமரியாதை இழந்தவர்களாக மற்றும் குற்ற உணர்வினால் அதிகம் திணறினால், அத்தகையவர்களுக்கும் நரம்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 

இரவில் தூக்கம் வராமலோ அல்லது அளவே இல்லாமல் தூங்கினாலோ, அதுவும் நரம்பு முறிவு ஏற்படப் போவதைக் குறிக்கிறது. 

மன அழுத்தம் ஒட்டுமொத்த உடலையும் சோர்வடையச் செய்து, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத அளவில் மிகவும் பலவீனமாக்கிவிடும். இப்படிப்பட்ட உணர்வும் நரம்பு முறிவிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். 

காரணமின்றி துணையுடன் உறவில் ஈடுபட நாட்டமில்லாமல் போனால், அதுவும் நீங்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். 

மனதில் கஷ்டம் அல்லது அழுத்தம் அதிகரிக்கும் போது, சிலர் அளவுக்கு அதிகமாகவும், இன்னும் சிலர் சாப்பிடாமலும் இருப்பர். இப்படியெல்லாம் மனதில் தோன்றச் செய்வதற்கு கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹோர்மோன் தான் காரணம். 

தலைவலியில் இருந்து, வயிற்று வலி வரை அனைத்துமே அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருப்பதைக் குறிக்கும். முக்கியமாக மன அழுத்தம் இருந்தால், செரிமான மண்டலமும் பாதிக்கப்பட்டு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படக்கூடும். 

எந்த ஒரு விடயத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாமல், மூளை கவலை உலகில் சூழ்ந்து, ஒருவித குழப்பத்திலேயே இருந்தால், அதுவும் மன அழுத்தத்தால் நரம்பு முறிவு ஏற்படப் போகிறது என்பதைக் குறிக்கும். 

அதிகளவு மன அழுத்தத்தில் இருக்கும் போது, சிலர் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்ந்து, மார்பு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டிருப்பது போன்று உணர்வார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right