ஜோதிடமும் மனித இயல்பும்

Published By: Nanthini

04 Nov, 2023 | 05:05 PM
image

மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் முறையே சுக்கிரன், புதன், செவ்வாய், சனி, குரு, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய ஏழு கிரகங்களின் கதிர் வீச்சை உள்வாங்கி அதற்கேற்பவே இயங்கும். 

எந்த கிரகத்தின் கதிர் அலைகள் அதிகமாக இருக்கின்றதோ, அதன் தாக்கம் அவருக்கு அதிகமாக இருக்கும். இதை ஜாதகத்தில் ஆட்சி, நட்பு, உச்சமடைந்திருக்கும் கிரகத்தின்  வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். குறைவாக இருப்பதை மறைவு, நீச கிரகம் சுட்டிக்காட்டும். இந்த கிரகங்கள் எல்லாம் அவை செல்லும் பாதையில் உள்ள 27 நட்சத்திரங்கள் கொண்ட மண்டலத்தின் வாயிலாக எடுத்துக்காட்டும்.  

* சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் அதிக ஆணவம், கோபம், ஜெயிக்க வேண்டும் என்கிற ஆதிக்க எண்ணத்தை காட்டும். 

* சந்திரன் அவசரத்தன்மையையும், நிலையில்லா மனத்தையும் காட்டும். 

* புதன் நல்ல அறிவு மற்றும் அடுத்தவரை ஏமாற்றும் குணத்தையும் காட்டும். 

* குரு மனிதனின் பக்குவத்தை காட்டும். 

* சுக்கிரன் அதிக ஆசையையும் போக குணத்தையும் காட்டும். 

* சனி கடின உழைப்பையும் மனக்கவலையையும் ஏற்படுத்தும். 

இவை ஒருவரது ஜாதகத்தில் பலமாக இருந்தால், அதிகமாகவும், பலவீனமாக இருந்தால், குறைவாகவும் இருக்கும்.  

அதேபோன்று இந்த கிரகங்கள் மனிதர்களிடத்தில் வெவ்வேறு உடல் நல மாற்றங்களை வெளிப்படுத்தும். 

சூரியன் அதிக தலைவலியையும், செவ்வாய் உடலில் அதிக உஷ்ணத்தையும், புதன் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், குரு உடலின் ஜீரண சக்தி மற்றும் கரு உற்பத்தித் தன்மையையும், சுக்கிரன் தாம்பத்யம் சம்பந்தப்பட்ட விடயங்களையும், சனி தீராத வியாதிகள் மற்றும் நோயற்ற தீர்க்கமான வாழ்வையும் வெளிப்படுத்தும்.   

இவை யாவும் ஒரு மனிதனுக்கு எப்போது, எந்த முறையில் வரும் என்பதை அவற்றின் காலங்கள் மூலமாக, அதாவது அந்தந்த தசா புத்திகள் மூலம் கண்டறிந்து விளக்குவதுதான் ஜோதிடம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right