ஆணைக்குழுக்களை அமைத்து தேர்தல்களை பிற்போடுவதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் - கடுமையாக சாடும் எதிர்க்கட்சிகள்

Published By: Digital Desk 3

04 Nov, 2023 | 07:58 PM
image

ஆர்.ராம்

ஆணைக்குழுக்களை அமைத்து அதன் ஊடாக தேர்தல்களை பிற்போடுவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகவுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.

நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்குதற்குமாக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி வெவகே பிரியசாத் ஜெரார்ட் டெப் தலைமையில் பத்துபேர் கொண்ட புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க நியமித்துள்ளமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.  அக்கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமக்குள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஆணைக்குழுக்களை நியமிக்க முடியும். ஆனால் அந்த ஆணைக்குழுக்கள் தேர்தலை நடத்துவதற்குரிய முனைப்புக்களை கொண்டதாக காணப்படவில்லை. 

ஏற்கனவே, மாகாண சபைகளுக்கான தேர்தல் ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடத்தப்படாதுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுளும் நிறைவுபெற்றபோதும் அத்தேர்தலும் நடத்தப்படாதுள்ளது. குறிப்பாக நீதித்துறை தேர்தலை நடத்துமாறு அறிவித்தும் நிதி அமைச்சு அதற்கான நிதியை விடுக்காமையினால் தேர்தலை நடத்த முடிந்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையில், தற்போது தேர்தலை நடத்தாது காலத்தைக் கடத்துவதற்காகவே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தாத நாட்டில் ஆணைக்குழுக்களை நியமிப்பதால் என்ன நன்மை ஏற்படப்போகின்றது என்றார்.

இலங்கை தமிழரசுக்கட்சி

இலங்கை தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. 

அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் பழைய முறையில் தேர்தல் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதற்காக என்னால் தனிநபர் பிரேரணையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையில் அந்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் விருப்புக்களைத் தெரிவிக்கவில்லை. 

ஆகவே, தேர்தல்களுக்கான முறைமைகளை சீர்செய்வதாக அரசாங்கம் கூறி ஆணைக்குழுக்களை அமைப்பதானது, தேர்தல் நடத்தாது காலத்தினை கடத்துவதற்காகவே ஆகும். உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலையும் அரசாங்கம் நடத்துவதற்கு தயாராக இல்லை. 

எனவே, அரசாங்கம் தேர்தல்களுக்கான முறைமைகளை சீர்திருத்துவதற்கு முன்னதாக, மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றக் கட்டமைப்புக்களுக்கான தேர்தலை முன்னெடுக்க  வேண்டியது அவசியமாகும் என்றார்.

தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவிக்கையில்,  அரசாங்கத்தினைப்பொறுத்தவரையில் மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதில் கரிசனைகள் இல்லை. தேர்தல்களில் தமக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கி அதில் வெற்றி பெறுவதே நோக்கமாக காணப்படுகின்றது. 

அந்தப் பின்னணியில் தான் தற்போதைய சூழல் தமக்கு சதகமில்லை என்று கருதுகின்ற அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கு அல்லது எதோவொரு வகையில் காலம் தாழ்த்துவதற்கு திட்டமிடுகின்றது. அந்தவகையில் தேர்தலை பிற்போடுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டே தற்போது ஆணைக்குழுக்களை அறிவித்து வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல்...

2024-12-10 00:53:34
news-image

தேங்காய் ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள்...

2024-12-09 20:37:12
news-image

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை...

2024-12-09 17:09:44
news-image

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை...

2024-12-09 20:47:19
news-image

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

2024-12-09 20:40:05
news-image

ரத்வத்தவின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

2024-12-09 20:31:59
news-image

ரணிலை காட்டிலும் அநுர அடிபணிந்துள்ளார் -...

2024-12-09 17:07:33
news-image

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக...

2024-12-09 19:33:14
news-image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்...

2024-12-09 19:09:03
news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39
news-image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக...

2024-12-09 17:32:46
news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46