ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்டவிரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்­டமை, சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை, ஆயு­தத்தால் தாக்க­ப்பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்பட்­டமை மற்றும் நெயார் குடும்­பத்­தி­ன­ருக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டமை தொடர்பில் 5 இரா­ணு­வத்­தினர் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்பட்­டுள்ள ஐந்து இரா­ணு­வத்­தி­ன­ரி­டமும் முன்­னெ­டுக்­கப்பட்ட நீண்ட விசா­ர­ணை­களில் நாட்டில் இடம்­பெற்ற வெள்ளை வேன் கடத்­தல்கள் தொடர்பில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக  குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

அத்­துடன் இந்த விவ­காரம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்­யப்­ப­டலாம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டமை, தாக்கப்பட்டமை குறித்து, விசாரணைகளை இந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவே முன்னெடுப்பதும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை, ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை குறித்தும் இந்தக் குழு விசாரணை நடத்தி வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.