ஐ.பி.எல். இல் மெத்தியூஸின் அதிகபட்ச அடிப்படை விலை எவ்வளவு தெரியுமா ?

Published By: Priyatharshan

20 Feb, 2017 | 10:42 AM
image

இலங்கை அணித் தலவர் அஞ்சலோ மெத்தியூஸின் அடிப்படை விலை அதிகபட்சமாக இந்திய ரூபா மதிப்பில் 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2 கோடியில் இருந்து அவரின் ஏல விலை ஆரம்பமாகவுள்ளது.

10 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் மே 21 திகி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெறவுள்ளது. இதையொட்டி 44 வெளிநாட்டு  வீரர்கள் உட்பட 140 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். ஏனைய வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

அணிகளால் விடுவிக்கப்பட்டவர்கள், புதியவர்கள் என 130 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடாதவர்கள். .

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஏலம் விடுவதில் பிரசித்தி பெற்ற லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் மேட்லி வீரர்களுக்கான ஏலத்தை நடத்துகிறார்.

இதில் யார் அதிக விலைக்கு போவார்கள் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். இங்கிலாந்து 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், இலங்கை அணித் தலைவர் மெத்தியூஸ், அஸ்திரேலியாவின் கம்மின்ஸ், மிட்செல் ஜோன்சன், இந்தியாவின் இஷாந்த் ஷர்மா ஆகியோரின் அடிப்படை விலை அதிகபட்சமாக இந்திய ரூபா மதிப்பில் 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.2 கோடியில் இருந்து இவர்களின் விலை ஆரம்பமாகின்றது.

அணி நிர்வாகங்கள் சகலதுறை ஆட்டக்காரர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களையே அதிகமாக குறி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்தின் காலின் டி கிரான்ட்ஹோம், ஆப்கானிஸ்தானின் முகமது நபி, நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் டைமல் மில்ஸ், தென்னாபிரிக்காவின் ரபடா ஆகியோர் நல்ல விலைக்கு போவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு அணியும் தலா இந்திய ரூபா மதிப்பில் 66 கோடி வரை செலவு செய்ய முடியும். தக்க வைத்துள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போக மீதி தொகையை கொண்டு ஏலத்தில் செலவு செய்யலாம். இந்த வகையில் அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.23.35 கோடி இருப்பு வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் முன்னணி நிர்வாகிகள் சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி, அனிருத் சவுத்ரி ஆகியோர் ஏலத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என்று வினோத் ராய் தலைமையிலான இந்திய கிரிக்கெட் சபை நிர்வாக குழு அறிவித்துள்ளது. இந்திய உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அவர்களுக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15