மதிலை உடைத்துக்கொண்டு வேனில் மோதிய கல்குடா பொலிஸ் ஜீப் !

03 Nov, 2023 | 05:28 PM
image

கல்குடா பொலிஸ் நிலைய ஜீப் வண்டி இன்று (3) வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி வேகமாக பயணம் செய்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாழைச்சேனை துறைமுகத்துக்கு முன்னாலுள்ள வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் மோதியுள்ளது.

இவ் விபத்தில் மதில், ஜீப் வண்டி,  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இவ் விபத்தில் ஜீப் வண்டியை செலுத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19