நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக பல மாகாணங்களுக்கு மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
மின்னல்தாக்கத்தின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது .
இடியுடன் கூடிய மழையின் போது திறந்தவெளி நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் , கம்பியில் இணைக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல், மிதிவண்டிகள், ட்ரெக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல், மரங்கள் மற்றும் மின் கம்பிகள் விழுந்து கிடப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு போன்ற விடயங்களில் மக்கள் விழிப்பாக இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .
இதேவேளை, இன்று நாட்டில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM