களுத்துறை - கட்டுக்குறுந்த படகு ஏற்பட்ட விபத்தில் சிறுவர் ஒருவர் உட்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளநிலையில் மேலும் ஐவரின் நிலை கவலைக்கிடமாகவும் ஒருவர் இன்னும் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏற்றிச்செல்லபட்டமையே குறித்த விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்ற போது அப் படகில் 41 பேர் பயணித்துள்ளனர்.

இதன்போது காணாமல்போன 29 பேர் மீட்கப்பட்டு, அதில் 26 பேர் பேருவளை வைத்தியசாலையிலும், 6 பேர் களுத்துறை நாகொட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை புனித லாசரஸ் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த தேவாலயத்தை நோக்கி பயணித்த படகு ஊர்வலத்தின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.