நாடளாவிய ரீதியில் 3,000 கிராமசேவகர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
'ஒரே கிராமம் ஒரே நாடு' என்ற கருத்தின் கீழ் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான 17ஆவது கலந்துரையாடல் புதன்கிழமை (01) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர்,
மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க அதற்கான போட்டிப் பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும். அத்தோடு, மூன்று மாதங்களுக்குள் அந்த நியமனங்கள் அனைத்தும் இறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM