அட்டன் – கினிகத்தேன பிரதான வீதியில் செனன் தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலுள்ள தேயிலை தோட்ட வடிகாலில் இன்று வெள்ளிக்கிழமை (03) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் அட்டன் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமைக் காரியாலயத்தில் எரிபொருள் வழங்கும் தொழிலாளியாக பணிபுரியும் செனன் தோட்டத்தைச் சேர்ந்த ராமையா மனோகரன் (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 31ம் திகதி பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் தேயிலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று சடலத்தை முதலில் கண்டதுடன் பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அட்டன் நீதவான் வருகை தந்து சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM