இதைச் செய்யுங்கள்... அழகாகிவிடுவீர்கள்! 

Published By: Nanthini

03 Nov, 2023 | 02:14 PM
image

1. யாருடனும் ஒப்பிடாதீர்கள்

நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப் பயனும் இல்லை.

2. உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள்

அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத் தரும்.

3. உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்புங்கள்

சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள் பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும் சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5. உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்

அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, நடனம் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப் பறப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6. உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்

அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே! கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்.

7. நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்

எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிதுபடுத்தாதீர்கள். பெருந்தன்மையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே.

8. உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களை கண்டுகொள்ளாதீர்கள்

திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களை தனித்தன்மையுடன் காட்டும்.

9. நம்பிக்கையுடன் செயற்படுங்கள்

உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயற்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாக காட்சியளிக்க முடியாது.

10. பொறாமையை விட்டுத்தள்ளுங்கள்

பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றை பார்த்துப் பொறாமைப்படுவதை விட உங்கள் வாழ்வை, செயல்களை திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11. உங்களை நீங்களே விரும்புங்கள்

உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை, உயரத்தைப் பற்றியெல்லாம் எண்ணி கவலைப்படுவதை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.

12. உங்களை அலங்காரப்படுத்துங்கள்

குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்