இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் போட்டியில், பூனே சுப்பர் ஜயன் அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இறுதியாக கடந்த வருடம் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது பூனே அணிக்கு தலைமை வகித்த இந்திய அணியின் முன்னாள் தலைவர்  மகேந்திர சிங் டோனி தலைமை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது பூனே அணி 7 இடத்தை பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.ஆகவே இதனால் டோனி அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை டோனி இந்திய அணியின் தலைமைத்துவத்திலிருந்து விலகியதற்கு பிறகு சிறப்பாக துடுப்பெடுத்தாடுவதால் அவர் தலைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.