இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலிருந்து ஹட்டன் பிரதான வழியாக வலப்பனை பிரதேசத்தை நோக்கி பயணித்த லொறி ஒன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் தலவாக்கலை தொழிற்சாலைக்கு அருகாமையில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதில் பயணித்த சாரதி உட்பட மேலும் ஒருவருமே இவ்வாறு சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை வாகனத்தில் ஏற்றி வந்த பழங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு தூக்ககலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)