இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு - இராகலையில் சம்பவம்

Published By: Digital Desk 3

03 Nov, 2023 | 10:28 AM
image

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் 1,000 அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் தலை வேறாக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை இராகலை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (02)  மாலை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசிக்கும் மலிந்த தில்ஷான் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

சடலமாக மீட்கப்பட்ட மலிங்க தில்ஷான் தனது வீட்டில் தாய், தந்தையரை தாக்கி “நான் எங்காவது போய் எனது உயிரை மாய்த்துக்கொள்வேன், எனது உடல்கூட உங்களுக்கு கிடைக்காது“ என கூறிவிட்டு கடந்த முதலாம் திகதி மாலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதையடுத்து, பெற்றோர்களும் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் கோபத்தில் சென்ற மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்தும் உள்ளனர். 

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை இளைஞரின் வீட்டாருக்கு  தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் தன்னை அடையாளப் படுத்திகொள்ளாத நபர்  தர்பனா எல மலை அடிவாரத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இத் தகவலை பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். பின் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை பொலிஸார் அங்கு தலை வேறு உடல் வேறாக கிடந்த  இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதேநேரத்தில் உயிரிழந்திருப்பதாக தமது மகன் என பெற்றோர்களும் அடையாளம் காட்டியுள்ளனர்.

பின் சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தர்பனா எல மலை சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்டுள்ளது என தெரிவித்த பொலிஸார் இம் மலை உச்சியிலிருந்து இவ் இளைஞன் வீழ்ந்துள்ளமையினால்  உடல் பாகங்கள் சிதறி மரணம் சம்பவித்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

மேலும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-17 14:42:31
news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04